கோவை,:தேசிய அளவிலான 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் இறுதிப்போட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நேற்று துவங்கியது.
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான 'விஜய் மெர்ச்சன்ட் கோப்பைக்கான' மாநில அளவிலான போட்டி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான போட்டிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில நடந்தன.
இதன் இறுதிப்போட்டி, நவ இந்தியா ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நேற்று துவங்கியது.
இப்போட்டியில், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில அணிகள் போட்டியிடுகின்றன.
டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி முதலில் பேட் செய்தது. அணியின் சவுர்யா பசூரி (35) ரன்கள் சேர்த்தார். பஞ்சாப் அணியின் அன்மேல்ஜீத் ஐந்து விக்கெட் வீழ்த்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மத்திய பிரதேஷ் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்திருந்தது.
பிரதீக் சுக்லா (34), அதர்வா (0*) ஆகியோர் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.