கோவை:நாட்டுக்கோழி வளர்க்க, கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் சார்பில், நாளை இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, கோவை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் சித்ராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சரவணம்பட்டி, காளப்பட்டி பிரிவு அருகே உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மையத்தில், நாளை நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை, பயிற்சி நடக்கவுள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள், மையத்தை நேரிலோ அல்லது0422- 2669965 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு, தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.