அவிநாசி:தைப்பொங்கல் பண்டிகையின் நிறைவு நாளான நேற்று காணும் பொங்கல் அவிநாசி அருகே விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அவிநாசி, ராயம்பாளையத்தில் உள்ள நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு பூப்பறிக்கும் விழாவானது மாரியம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்றது.
குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட பாரம்பரிய உணவுகளையும், முறுக்கு, பொரிகடலை கரும்பு, இனிப்பு வகைகள் உள்ளிட்ட தின்பண்டங்களை கூடையில் வைத்து கும்மியடித்து பாட்டு பாடினர்.
l இதேபோல, சேவூர் அருகேயுள்ள முறியாண்டம்பாளையம், காமராஜ் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தாரை, தப்பட்டை முழங்க முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று சேவூர் வாலீஸ்வரர் கோவில் திடலில் பகும்மியடித்து கிராமிய பாட்டு பாடி மகிழ்ந்தனர்.