கோவை:மாநகரில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த வாலிபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
செல்வபுரம் எழில் நகர் தெற்கு ஹவுசிங் யூனிட் அருகே சுற்றித்திரிந்த மூன்று வாலிபர்களை, எஸ்.ஐ., நடராஜன் தலைமையிலான போலீசார் மடக்கினர். அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கொமாரபாளையம் சி.ஜி.வி.நகரை சேர்ந்த மகேஸ்வரன், 22, செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டை சேர்ந்த ராகுல் ராஜ், 21, எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த நிதிஷ், 21, ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ராகுல் ராஜ் மீது ஏற்கனவே வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் 6 குற்ற வழக்குகள் பதிவாகியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த மூவரும் கஞ்சா, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரித்து வருகிறார்.