குழியை மூட வேண்டும்!
திருப்பூர், பெரியார் காலனி, கருப்பராயன் கோவில் எதிரில் நடுரோட்டில் உள்ள குழியை மூட வேண்டும். வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
- கருப்புசாமி, பெரியார்காலனி.
சாலையை சீர்செய்யலாமே!
சேவூர் - போத்தம்பாளையம் சாலையில் ரோட்டோரத்தில் மழைநீர் தேங்கி பாதி சாலை இருபுறமும் சேதமாகியுள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்
- மாகாளியப்பன், போத்தம்பாளையம்.
பஸ் ஸ்டாப்பை இடமாற்ணும்!
திருப்பூர் அனுப்பர்பாளையம் புதுார் பஸ் ஸ்டாப்பை இடமாற்ற வேண்டும். வாகனங்கள் வந்து திரும்பும் சந்திப்பு அருகே ஸ்டாப் இருப்பதால், பீக்ஹவர்ஸில் பயணிகள், பஸ்கள் நிற்க இடையூறாக உள்ளது.
- சேதுமாதவன், அனுப்பர்பாளையம்.
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், தண்ணீர் பந்தல் - அம்மாபாளையம் இடையே வங்கி ஏ.டி.எம்., முன், குழாய் உடைந்து தண்ணீர், 24 மணி நேரமும் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- ரவிச்சந்திரன், அம்மாபாளையம்.
திருமுருகன்பூண்டி பஸ் ஸ்டாப் அருகே, பொது குடிநீர் குழாய் உள்ளது. கேட்வால்வு பழுதாகி இருப்பதால், குழாயை அடைத்த பின்னரும் தண்ணீர் வீணாகிறது. சீரமைக்க வேண்டும்.
- தேவா, திருமுருகன்பூண்டி. (படம் உண்டு)
திருப்பூர், 15 வேலம்பாளையம், பிளேக் மாரியம்மன் கோவில் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. குழாய் உடைப்பை சீர்செய்ய வேண்டும்.
- சுதர்சன் பெரியசாமி, 15 வேலம்பாளையம். (படம் உண்டு)
காத்திருக்கும் ஆபத்து
திருப்பூர், காங்கயம் ரோடு, சி.டி.சி., கார்னரில் இருந்து வளம் பாலம் செல்லும் ரோட்டில் பாதிவரை மணல் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் வாய்ப்புள்ளது. மணலை அகற்ற வேண்டும்.
- சாதிக்பாட்ஷா, சி.டி.சி., கார்னர். (படம் உண்டு)
திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையத்தில் நடுரோட்டில் உள்ள குழியில் தண்ணீர் வீணாகிறது. வேகமாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். தண்ணீர் வீணாவதை தடுத்து குழியை மூட வேண்டும்.
- பிரவீன், பாரப்பாளையம். (படம் உண்டு)
'பேட்ஜ் ஒர்க்' அவசியம்
திருப்பூர், சபாபதிபுரம் டி.எம்.எப்., சுரங்க பாலம் - கோர்ட் வீதி சந்திப்பில் சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. 'பேட்ஜ் ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.
- ரஞ்சித்குமார், சபாதிபுரம். (படம் உண்டு)