அவிநாசி:அவிநாசியில் இயங்கும் தமிழர் பண்பாடு கலாச்சார பேரவை சார்பில், அம்மாபாளையத்தில் உள்ள ஸ்ரீ அம்மன் மஹாலில், 8ம் ஆண்டு, தைப்பொங்கல் தமிழர் திருநாள்,உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம், மகாகவி பாரதியார் பிறந்த தினம் என முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கும்மி, கோலாட்டம், நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஈசன் குழுவினரின் 'உள்ளி விழவு' எனும் பெருஞ்சலங்கையாட்டம், பல்லடம் யோநாவின் மாயாஜால நிகழ்ச்சி, வெள்ளலுார் கோபாலகிருஷ்ணனின் 'பண்ணும் பரதமும்' நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முன்னதாக முப்பெரும் விழாவுக்கு, பேரவை தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். ஓய்வூதிய சங்கத் தலைவர்கள் முத்து அவிநாசியப்பன், சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் அப்புசாமி, முத்து அவிநாசியப்பன், செயலாளர்கள் வெங்கடாசலம், அருணாசலம், முருகேசன், பொருளாளர் ராயப்பன் உட்பட பலர் பங்கேற்று பேசினர். கிளை நிர்வாகிகள் வெங்கடாசலம், பழனிசாமி, ஆனந்தி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.