கோவை:கோவை மத்திய மண்டல மின் வாரிய அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது.
கோவை, ரேஸ்கோர்ஸ், அப்துல் ரஹீம் சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில், காலை 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் பங்கேற்று குறைகளைக் கேட்டறிகிறார்.
மின் நுகர்வோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என, கோவை மத்திய செயற்பொறியாளர் துரைசாமி தெரிவித்துள்ளார்.