வடவள்ளி:நவாவூர் பிரிவில், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட, 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடவள்ளி அடுத்த நவாவூர் பிரிவில், சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வடவள்ளி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட வடவள்ளியை சேர்ந்த செல்வராஜ், 52, குமார்,57, தியாராஜன்,58, கதிரேசன்,55, வீரகேரளத்தை சேர்ந்த தாமஸ்,36, முத்துராஜ்,63, நாராயணன்,53, அஸ்கர்,52 ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், 2,450 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.