கோவை:வீடுகளுக்கு சென்று தபால் டெலிவரி செய்ய சென்ற ஊழியரின், சைக்கிள் திருட்டு போனது.
கோவை அருகேயுள்ள குரும்பபாளையத்தை சேர்ந்த வருண்,23, ஆர்.எஸ்.புரம், தலைமை தபால் நிலையத்தில் போஸ்ட்மேனாக பணியாற்றி வருகிறார்.
வீடுகளுக்கு சென்று தபால் வழங்க, அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள சைக்கிளை, பயன்படுத்தி வந்தார்.
நேற்று முன்தினம் மதியம்,ஆர்.எஸ்.புரம், சுப்பிரமணியன் ரோட்டில், சைக்கிளை நிறுத்தி விட்டு தபால் டெலிவரி செய்ய சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது, சைக்கிளை காணவில்லை. அதிர்ச்சியடைந்த வருண், போலீசில் புகார் அளித்தார். ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.
Advertisement