பெ.நா.பாளையம்:துடியலூர் அருகே அத்திக்கடவு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்திக்கடவிலிருந்து வரும் குடிநீர், பிரஸ் காலனியில் இருந்து பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளுக்கும், குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, சின்னதடாகம், வீரபாண்டி ஊராட்சிகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.
வடமதுரை அருகே இக்குழாயில், நேற்று இரவு திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இதை செப்பனிடும் பணியில் அத்திக்கடவு குடிநீர் குழாய் திட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், ' இரவோடு, இரவாக குடிநீர் குழாயில் ஏற்பட்ட வெடிப்பை சரி செய்து, நாளை காலை(இன்று) வழக்கம் போல, குடிநீர் வினியோகம் செய்யப்படும்' என தெரிவித்தனர்.