சூலுார்:சூலுார் அடுத்த நாகமநாயக்கன் பாளையத்தில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது.
அதிகாலை கோவிலை திறந்தபோது, உள்ளே இருந்த பித்தளை தட்டுகள், மணிகள், குத்து விளக்குகள் திருடப்பட்டது தெரிந்தது. உடனடியாக கோவில் நிர்வாகிகள் சுற்று புறத்தில் தேடினர்.
அப்போது, ஒரு நபர் தலையில் சாக்குமூட்டையுடன் செல்வதை கண்டு, அந்நபரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் கோவில் பூஜை பொருட்கள் இருந்தன. அந்நபரை சூலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், திருடிய நபர், உடுமலைபேட்டை அடுத்த மானுப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன்,57 என தெரிந்தது. பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.