நொய்யல் நதிக்கரையோரம், திருப்பூர் பொங்கல் திருவிழா, நிறைவு நாளான நேற்று காலை, 3 ஆயிரம் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் வருவதற்குள், பொங்கல் நிகழ்ச்சி துவங்கியது.
விழா நடக்கும் இடத்துக்கு வந்த எம்.எல்.ஏ., பொங்கல் முன் கூட்டியே துவங்கியதை பார்த்து கோபம் அடைந்தார். யாருடன் முகம் கொடுத்து பேசாமல், அப்பகுதியில் நடந்து கொண்டிருந்தார். கலெக்டர், கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்த பின்னரும் கூட, எம்.எல்.ஏ., செல்லவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விழா ஏற்பட்டாளர்கள், போலீசார் என, சிலர் எம்.எல்.ஏ., செல்வராஜை சமாதனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், எம்.எல்.ஏ., கோபம் கடைசி வரை தணியவில்லை. ஒரு வழியாக அவர் சமாதானம் அடைந்ததை பார்த்து, விழாக்குழுவினர் சற்று நிம்மதி அடைந்தனர்.