வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கடந்த 2021- 2022 நிதி ஆண்டில் தேசிய கட்சியான பா.ஜ., ரூ..1,917 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணைய சட்டப்படி, அரசியல் கட்சிகள், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெறும் நன்கொடை விபரங்களை ஆண்டுதோறும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
இதன்படி அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் கடந்த 2021-22 நிதி ஆண்டில் தங்கள் பெற்ற நன்கொடை குறித்த வருடாந்திர கணக்கை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தன. அதன் விவரம் வெளியாகியுள்ளது.
![]()
|
அதில் மத்தியில் ஆளும் பா.ஜ. அதிகபட்சமாக ரூ. 1,917 கோடி எனவும், இதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றது. ரூ.1,033.7 கோடி ஆகும். செலவினமாக ரூ.854.46 கோடி இருந்துள்ளது.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ரூ.541 கோடி கிடைத்துள்ளதாகவும் அதன் செலவுக்கணக்கு ரூ.400.41 கோடியாக இருந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி பெற்ற நன்கொடை ரூ.2.87 கோடியாகவும், செலவு ரூ.1.18 கோடியாகவும் இருந்தது.