எனது பேச்சின் அடிப்படை புரியாமல் விவாதமாகி உள்ளது: தமிழ்நாடு சர்ச்சைக்கு கவர்னர் விளக்கம்

Updated : ஜன 18, 2023 | Added : ஜன 18, 2023 | கருத்துகள் (71) | |
Advertisement
சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு என்பதை தமிழகம் எனக் குறிப்பிட்டது சர்ச்சையான நிலையில் தற்போது விளக்கமளித்துள்ளார்.தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில், 'தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பதே சரியாக இருக்கும்' என குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு திமுக.,வினர் மற்றும் அதன்
The basis of my speech is debated without understanding: Tamil Nadu Controversy ends with Governors explanation  எனது பேச்சின் அடிப்படை புரியாமல் விவாதமாகி உள்ளது: தமிழ்நாடு சர்ச்சைக்கு கவர்னர் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு என்பதை தமிழகம் எனக் குறிப்பிட்டது சர்ச்சையான நிலையில் தற்போது விளக்கமளித்துள்ளார்.தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில், 'தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பதே சரியாக இருக்கும்' என குறிப்பிட்டு பேசியிருந்தார்.


இதற்கு திமுக.,வினர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், திமுக கூட்டணி கட்சிகள் கவர்னருக்கு எதிராக சட்டசபையில் கவர்னர் உரையின்போது எதிர்த்து கோஷம் எழுப்பினர். தமிழ்நாடு என்றே குறிப்பிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.இந்த நிலையில் தமிழகம் எனக் குறிப்பிட்டதற்கு கவர்னர் ரவி தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த விளக்கம்:

கடந்த ஜன.,4ல் கவர்னர் மாளிகையில் 'காசி-தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் வரலாற்றுப் பண்பாடு பற்றி பேசும்போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, 'தமிழகம்' என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அந்த காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை.latest tamil news

எனவே வரலாற்று பண்பாட்டு சூழலில், தமிழகம் என்பதை 'பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்து கொள்கிறேன்.


எனது பேச்சின் அடிப்படை புரியாமல், கவர்னர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (71)

spr - chennai,இந்தியா
21-ஜன-202321:08:22 IST Report Abuse
spr "வரலாற்று பண்பாட்டு சூழலில், தமிழகம் என்பதை 'பொருத்தமான வெளிப்பாடு' என்ற விளக்கம் பொருத்தமான ஒன்றே தொன்மைத் தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற தமிழகம் என்று குறிப்பிடுவதுதான் முறை ஆனால் "அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு"என்று கூவியவர்களுக்கு குறைந்த பட்சம் தமிழ்நாடு என்று சொன்னாலாவது அதில் நாடு என வருமே என்ற ஒரு சிறு நப்பாசை அன்று அண்ணா சொன்னதாக வெளியானதொரு செய்தி " 'வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில் நாம் பிரிவினை பேசுவது அயலானுக்கு இடம் கொடுத்துவிடுவதாகும்." நாடு இருந்தால்தான் கட்சி நடத்த முடியும் நல்ல உத்தியே
Rate this:
Cancel
19-ஜன-202310:05:47 IST Report Abuse
அப்புசாமி காசி சங்கமம் முடிஞ்சு மாமாங்கம் ஆனாலும் இன்னிக்கிதான் அதைப்பத்தி புது விளக்கம்.கண்டுபுடிச்சு எழுதிக்.குடுக்கறாங்கோ.
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
20-ஜன-202317:13:57 IST Report Abuse
Neutralliteஆளுநர்கள் எப்போவாவது தான் விளக்கம் கொடுப்பார்கள்....
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-ஜன-202307:02:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அப்போ பொங்கல் விழாவிற்கு "தமிழ்நாடு", மற்றும் அரசு இலச்சினை நீக்கி விட்டு இவர் பத்திரிக்கை அடித்ததும் இங்கே மார் தட்டிக்கொண்டு, மீசையில் மண் ஒட்டாமல் மன்னிப்பு செய்தி போடுவாய்ங்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X