திருவாலங்காடு:அரிசந்திராபுரம் ஊராட்சியில், 600க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன், கட்டப்பட்ட ரேஷன் கட்டடம் தற்போது கூரை சேதமடைந்து சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்தும், ஆங்காங்கே கட்டடம் விரிசல் அடைந்தும், தரைப்பகுதி யில் ஓட்டை விழுந்த நிலை யில் பழுதடைந்துள்ளது.
மேலும், கட்டடம் பழுது அடைந்து உள்ளதால், மழை காலத்தில் ரேஷன் பொருட்கள் மழையில் நனைந்து விடும் நிலை உள்ளது.
அதேபோன்று, கட்டடத் தின் ஓட்டை வழியே எலி உள்ளே புகுந்து அரிசி, பருப்பை தின்று வருகிறது.இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதுடன், மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், பழுதடைந்த கட்டடத்தால் ரேஷனுக்கு வரும் மக்கள் எப்போது கட்டடம் இடிந்து விழும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து, ரேஷன் அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரிசந்திராபுரம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.