திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட அளவிலான, முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட உள்ளது.
இப்போட்டிகளுக்கு, இணையதள பதிவின் கடைசி தேதி, 17ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் தங்களுடைய வருகையை இணையதளத்தில் பதிவு செய்வதற்கான தேதி, வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும், புதிதாக கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு, விளையாட்டு வீரர்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.