ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில் மலையை ஒட்டிய மேட்டு நிலங்களில், உளுந்து, காராமணி, பட்டாணி உள்ளிட்டவை மானாவாரியில் பயிரிடப்பட்டுள்ளன.
மணற்பாங்கான, பாசன வசதி இல்லாத தரிசு நிலங்களில், உழுது விதைத்தால், தானாக விளைந்து பலன் தரக்கூடியவை இந்த வகை பயிர்கள்.
தனிப்பட்ட பாசன வசதி அவசியம் இல்லை. பயிர் பாதுகாப்பும் அவசியம் இல்லை என்பதால், விவசாயிகள் மானாவாரி சாகுபடியை கைவிடாமல் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த, காந்தகிரி மலைஅடிவார சுற்றுப் பகுதியில், தற்போது உளுந்து அறுவடை நடந்து வருகிறது.
உளுந்து காய்களில் இருந்து, முழு உளுந்தை பக்குவமாக பிரித்தெடுக்கும் பணியில், கைதேர்ந்த பெண் விவசாய தொழிலாளர்கள் முனைப்பாக ஈடுபட்டுள்ளனர்.
முதல் தர உளுந்து, 1 கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.