மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது புஷ்பகுஜாம்பாம் சமேத சிங்கீஸ்வரர் சுவாமி கோவில்.
மூல நட்சத்திரத்துக்காரர்களுக்கு குறைதீர்க்கும் இந்த கோவில், 35 லட்சம் மதிப்பில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக, கடந்த 15ம் தேதி, காலை 8:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது.
மஹா கும்பாபிஷேக நாளான நேற்று, காலை 9:00 மணிக்கு கடம் புறப்படுதலும், காலை 9:30 மணிக்கு, ராஜகோபுரம், அனைத்து விமானங்கள் மஹா கும்பாபிஷேகமும், காலை 10:00 மணி முதல், 10:30 மணி வரை சிங்கீஸ்வரர், அனைத்து பரிவார மூர்த்திகள் மஹா கும்பாபிஷேகமும் தொடர்ந்து மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
அதை தொடர்ந்து, மாலை 6:00 மணி முதல், 7:30 மணிக்குள் சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும், இரவு 8:00 மணிக்கு விசேஷ தீபாராதனையும். இரவு 9:30 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது.