காஞ்சியில் பயன்பாடின்றி கிடக்கும் வாக்காளர் அட்டை வழங்கும் இயந்திரம்

Added : ஜன 18, 2023 | |
Advertisement
காஞ்சிபுரம்:தொலைந்த அல்லது புதிய வாக்காளர் அடையாள அட்டையை, விரைந்து பெறுவதற்காக, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தானியங்கி இயந்திரம், தேர்தல் பிரிவு மூலம் வைக்கப்பட்டது.ஏ.டி.எம்.,இயந்திரம் போல இருக்கும் இந்த இயந்திரத்தில் புதிய வாக்காளர் அட்டையை சில நிமிடங்களில் பெற முடியும். 'இ--சேவை' மையத்தில் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்து
 காஞ்சியில் பயன்பாடின்றி கிடக்கும்  வாக்காளர் அட்டை வழங்கும் இயந்திரம்

காஞ்சிபுரம்:தொலைந்த அல்லது புதிய வாக்காளர் அடையாள அட்டையை, விரைந்து பெறுவதற்காக, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தானியங்கி இயந்திரம், தேர்தல் பிரிவு மூலம் வைக்கப்பட்டது.

ஏ.டி.எம்.,இயந்திரம் போல இருக்கும் இந்த இயந்திரத்தில் புதிய வாக்காளர் அட்டையை சில நிமிடங்களில் பெற முடியும். 'இ--சேவை' மையத்தில் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்து அதன் மூலம் கிடைத்த, 'கியூ ஆர் கோடு' மூலம் இந்த இயந்திரத்தில் 'ஸ்கேன்' செய்தால் போதும். உடனடியாக வாக்காளர் அடையாள அட்டை 'பிரிண்ட்' செய்து இலவசமாகவே வாக்காளருக்கு கொடுக்கும்.

இந்த இயந்திரம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தின் தரைதளத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே பயன்பாடில்லாமல் ஓரமாக கிடக்கிறது. துாசி படர்ந்து பராமரிப்பு இன்றி உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 5 ம் தேதி வெளியிடப்பட்டது.

வாக்காளர் பலருக்கும் புதிதாக வாக்காளர் அட்டை தேவைப்படுகிறது.

அதேபோல், தொலைந்த வாக்காளர் அட்டை தேவைப்படுவோருக்கும் இந்த இயந்திரம் பயன்படும். தேர்தல் பிரிவு அதிகாரிகள், இந்த இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வாக்காளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X