காஞ்சிபுரம்:திருக்கணித பஞ்சாங்கப்படி சனீஸ்வர பகவான், நேற்று முன்தினம் மாலை, 6:09 மணிக்கு, மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதையொட்டி, காஞ்சிபுரம் சர்வதீர்த்தகுளம் வீரஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சனி பெயர்ச்சி ஹோமம், மஹாபூர்ணாஹூதி, கலசாபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து நவக்கிரஹ அர்ச்சனையும், மஹா தீப ஆராதனையும், திவ்ய அலங்காரம் தரிசனமும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று பரிகார பூஜை செய்தனர்.
காஞ்சிபுரம் மாண்டுகண்ணீஸ்வரர் கோவில் தெரு, நிமிஷ விநாயகர் கோவிலில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு பரிகார ஹோமம் மற்றும் பரிகார பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்தார்.