உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சிறுமையிலுார் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 20. தனியார் தொழிற்சாலை தொழிலாளி.
இவர் 15ம் தேதி, இருசக்கர வாகனத்தில் படூர் கூட்டுச்சாலையில் உள்ள கடைக்கு சென்றார். அங்கு, ஆனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டியன், 25, என்பவரும் கடைக்கு வந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்கனவே இருந்த முன் விரோதம் குறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில், ராஜபாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள், ஜெயபிரகாஷ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பலத்த காயம் அடைந்த ஜெயபிரகாைஷ, அவர்களது உறவினர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.
தகவல் அறிந்த ஜெயபிரகாஷ் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், 16ம் தேதி, ஆனம்பாக்கத்திற்கு சென்று, வீட்டில் இருந்த ராஜபாண்டியனை உருட்டு கட்டை மற்றும் ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.
காயம் அடைந்த ராஜபாண்டியனை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, ஜெயபிரகாஷ் மற்றும் ராஜபாண்டியன் அளித்த புகார்படி இருதரப்பினர்கள் 8 பேரை உத்திரமேரூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.