சென்னை:உரிய ஆவணங்கள் இருந்தும் வணிகர்களிடம் அபராதம் விதிப்பதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, வணிக வரித் துறையில் 49 உதவி கமிஷனர்கள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வணிக வரித் துறை கமிஷனர் அளித்த பரிந்துரையை ஆய்வு செய்து, இந்த பணியிடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சென்னை நுண்ணறிவுப் பிரிவு - 1 மறுஆய்வு உதவி கமிஷனர் கவிதா, திருச்சி மண்டல ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
சென்னை வடக்கு மண்டல மதிப்பீட்டு வட்டம் - 2 உதவி கமிஷனர் மகேஸ்வரி, சென்னை நுண்ணறிவுப் பிரிவு - 1 மறுஆய்வு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை நுண்ணறிவுப் பிரிவு - 2 உதவி கமிஷனர் மீனாட்சி, திருச்சி மண்டல நுண்ணறிவு பிரிவு இணை கமிஷனரின் தனி உதவியாளராக மாற்றப்பட்டுள்ளார்.
மாதவரம் உதவி கமிஷனர் கார்த்திக், சென்னை நுண்ணறிவுப் பிரிவு - 2 உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுடன் மொத்தம், 49 உதவி கமிஷனர்களை, தமிழகம் முழுதும் பணியிட மாற்றம் செய்து, வணிக வரித் துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.