திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், தையூர் ஊராட்சியில், பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லுாரிகள், தனியார் பள்ளிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
வளர்ச்சியடைந்து வரும் இப்பகுதியில், 9,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி, இங்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன், பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைக்கும் திட்டம் துவங்கப்பட்டது.
ஆனால், 10 சதவீத கட்டுமான பணிகளுடன் முடங்கி விட்டது. தற்போது, அந்த வளாகம் முழுதும் முட்செடிகள் வளர்ந்து, புதர் மண்டிக் கிடக்கிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம், பாதியில் நிற்கும் கட்டுமானப் பணியை மீண்டும் துவக்கி, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.