மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாக்கம் ஊராட்சியில், அஞ்சுரம்மன் கோவில் குளத்தை ஒட்டி, கரும காரிய கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
தாய் திட்டம் 2014- - 15ம் ஆண்டு அமைத்த காரியக் கூடம், சில மாதங்களாக பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கிறது. கரும காரியம் செய்வோர், பாரம்பரிய முறையை மாற்ற முடியாமல், கோவில் குளக்கரையில் அமர்ந்து, முன்னோர்களுக்கு திதி கொடுக்கின்றனர்.
இக்கூடத்தை புதிப்பித்து, வர்ணம் பூச வேண்டும் என்று, பாக்கம் ஊராட்சி மக்கள், ஒன்றியம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.