திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் வரும் 21ம் தேதி அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.
சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம்.
இதை, அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் 'ஆன்லைனில்' பதிவு செய்ய அறிவுறுத்தப் பட்டு உள்ளது என, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.