'ஜூனியர் சூப்பர் கிங்ஸ் லீக்' கிரிக்கெட்: சென்னைக்கு முதல் வெற்றி

Added : ஜன 18, 2023 | |
Advertisement
சென்னை, பள்ளிகளுக்கு இடையிலான 'ஜூனியர் சூப்பர் கிங்ஸ் லீக்' கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் பாதியில், முதல் வெற்றியை சென்னை பி.எஸ்.பி.பி., பள்ளி பதிவு செய்தது.மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் லீக் கிரிக்கெட், கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது. இந்த தொடரில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள மொத்தம் 86 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.



சென்னை, பள்ளிகளுக்கு இடையிலான 'ஜூனியர் சூப்பர் கிங்ஸ் லீக்' கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் பாதியில், முதல் வெற்றியை சென்னை பி.எஸ்.பி.பி., பள்ளி பதிவு செய்தது.

மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் லீக் கிரிக்கெட், கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது. இந்த தொடரில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள மொத்தம் 86 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் சென்னை, திருச்சி, விழுப்புரம், கோவை உட்பட 15 மாவட்டங்களில், இரண்டு பகுதிகளாக நடக்கின்றன.

முதல் பகுதி போட்டிகள் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் நடந்தன.

சென்னையில் நடந்த முதல் பாதி போட்டியில், 18 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. அதில், பி.எஸ்.பி.பி., - ராமச்சந்திரா பப்ளிக் பள்ளிகள் வெற்றி பெற்று தகுதி பெற்றன.

இந்த இரண்டு அணிகள் மற்றும் பிற மாவட்டங்களில் தேர்வான ஆறு அணிகள் பங்கேற்கும் இரண்டாம் பாதியின் போட்டி, நெல்லையில் நேற்று துவங்கியது.

இதன் முதல் போட்டியில், சென்னை பி.எஸ்.பி.பி., மற்றும் சேலம் ஹோலி கிராஸ் பள்ளிகள் மோதின.

அதில் முதலில் பேட் செய்த பி.எஸ்.பி.பி., அணி, 20 ஓவர்கள் விளையாடி, நான்கு விக்கெட் இழந்து, 192 ரன்களை அடித்தது.

அடுத்து பேட் செய்த ஹோலி கிராஸ் பள்ளி, 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஆறு விக்கெட் இழப்புக்கு, 86 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதனால், 106 ரன்களில் சென்னை பி.எஸ்.பி.பி., பள்ளி வெற்றி பெற்று, முதல் வெற்றியை பதிவு செய்தது. போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X