செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், சங்கத் தமிழ் நுால்களின் செம்பதிப்பு, உரை, மொழிபெயர்ப்பு ஆகிய வடிவில் நுால்கள் வெளியிடப்படுகின்றன.
அந்த வகையில், 'இறையனார் களவியலுரை, ஐங்குறுநுாறில் மருதம், நெய்தல், குறிஞ்சித் திணைகள்' செம்பதிப்பாக வெளியாகி உள்ளது.
அதேபோல், வட்டாரம், தொழில், இனம் சார்ந்த தமிழ் வழக்காறுகளை வரலாற்று முறையில் தொகுத்து வகைப்படுத்தி, அகராதி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி நெல், ஆடு, மாடு வகைகளுக்கான வட்டார அகராதி வெளியாகிஉள்ளது. அதேபோல், சங்கத் தமிழ் நுால்கள் குறித்த ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள ஆய்வு நுால்கள் மற்றும் ஆங்கில விளக்கங்களுடன் கூடிய சங்கத்தமிழ் நுால்கள் நிறைய உள்ளன.
'சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும், குறுந்தொகை, சிந்துவெளி - தமிழ் எழுத்து ஒப்புமை, நாலடியார், நான்மணிக்கடிகை' உள்ளிட்ட நுால்களும் உள்ளன.
இவை, அனைத்தும் 50 சதவீத தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. மேலும், பல்வேறு ஒளி - ஒலி குறுந்தகடுகளும் விற்பனைக்கு உள்ளன. இவை, தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமையும்.