சென்னை அசாம் மாநிலத்தில், 71வது தேசிய சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம், 2ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் தமிழக இருபாலர் அணியினர் தேர்வு போட்டிகளை, வரும் 22ம் தேதி, தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத்தின் 'அடாக்' கமிட்டி, மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பள்ளியில் நடத்துகிறது. முகாமில் பங்கேற்க விரும்புவோர், காலை 7:00 மணிக்கு நேரில் சென்று, கலந்துக் கொள்ளலாம் என, வாலிபால் சங்க கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.