பேரம்பாக்கம்:பேரம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு, பார்வேட்டை திருவிழா நடந்தது.
இதில், பேரம்பாக்கம் காமாட்சியம்மன் சமேத சோளீஸ்வரர், வீரபத்திரர், கிளாம்பாக்கம் மரகதவல்லி சமேத திருநாகேஸ்வரர், நரசிங்கபுரம் முருகர்.
மாரிமங்கலம் ராமலிங்க அடிகளார், சிவமாரி நாராயணி, சிவபுரம் குறுந்த விநாயகர் என சுற்று வட்டார ஏழு கிராமங்களில் இருந்து ஏழு சுவாமி சிலைகள் டிராக்டரில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரே வரிசையில் நின்று முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பார்வேட்டை திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.