செவ்வாப்பேட்டை:சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ், 50. ஆட்டோ ஓட்டுனர்.
இவர், நேற்று முன்தினம், மனைவி மேரிசைலா, 45 மற்றும் மகள் ரூத், 13, ஆகியோருடன், தன் ஆட்டோவில் திருவாலங்காடு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை திரும்பி கொண்டிருந்தார்.
திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில் தொழுவூர் பகுதியில் வரும் போது நெடுஞ்சாலையில் மாடு குறுக்கே வரவே நிலை தடுமாறிய ஆட்டோ, மாடு மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இவரது மகள் ரூத், 13 பலியானார். செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.