சென்னைசென்னை மாநிலக் கல்லுாரியில், போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை, அமைச்சர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.
இங்கு, எஸ்.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி., - ஐ.பி.பி.எஸ்., - ஆர்.ஆர்.பி., என, அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும், தொடர்ச்சியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
அமைச்சர் கணேசன், தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலர் முகமது நசிமுத்தீன், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையாளர் வீரராகவராவ், மாநிலக் கல்லுாரி முதல்வர் ராமன் மற்றும் பலர் பங்கேற்றனர்.