சென்னை, விமானத்தில் செல்வதற்கான 'செக் - இன்' கவுன்டர்கள், மார்ச் மாதம் முதல் சோதனை அடிப்படையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலையம் தெரிவித்து உள்ளது.
இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் உடன், சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார், விமான நிறுவன பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர்.
இதில் முதல் கட்டமாக சோதனை அடிப்படையில், சில மெட்ரோ ரயில் நிலையங்களில், மார்ச் முதல் செக் - இன் வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்., 14ம் தேதி முதல் முழுமையாக செயல்படுத்தி, அதிக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என, சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.