நகரி:சித்துார் மாவட்டம், நகரி மண்டபம் அருகே எழுந்தருளியுள்ள வழிதுணை விநாயகர் கோவில் வளாகத்தில், மலைச் சுற்று விழா மற்றும் பார்வேட்டை உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில், உற்சவர்கள் நாராயணவனம் கல்யாண வெங்கடேச பெருமாள், கரிம்பேடு நாததீஸ்வரர், நகரி அகத்தீஸ்வரர், கரகண்டேஸ்வரர், தேசூர் அகரம் வேணுகோபால சுவாமி, கிருஷ்ணாராமாபுரம் கைலாச நாதர், சத்திரவாடா சிதம்பரேஸ்வரர், பாலமங்கலம் வாலீஸ்வரர்.
கம்பரபாளையம், மீனாட்சியம்மன், தும்பூர், தும்பூஸ்வரர், சிந்தலப்பட்டடை சரவணவிநாயகர், அகர விநாயகர் உட்பட 24 பகுதிகளில் இருந்து 24 உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சந்திப்பு விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.