தாம்பரம் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியவர் �லா ஜெபமணி, 51.
கடந்த 16ம் தேதி, இந்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமா பிரபா பணி முடிந்து வீட்டிற்கு சென்றார். அப்போது, குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலை அருகே விபத்து ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். இதுகுறித்து, �லா ஜெபமணிக்கு மொபைல் போன் மூலம் தகவல் அளித்துள்ளார்.
உடனே �லா ஜெபமணி, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அங்கு சென்றார். குரோம்பேட்டை பாலாஜி பவன் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் ஒன்று, இவரது இருசக்கர வாகனம் மீது மோதியதில், நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
தலையில் பலத்த காயமடைந்த �லா ஜெபமணியை, அங்கிருந்தோர் 108 ஆம்புலன்சில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சுயநினைவின்றி இருந்ததால், மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி �லா ஜெபமணி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, கார் டிரைவரான பல்லாவரத்தைச் சேர்ந்த சக்தி, 41, என்பவரை கைது செய்துவிசாரிக்கின்றனர்.