கோட்டை, ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்கிய ஓட்டுனரை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கொருக்குப்பேட்டை பாரதி நகர், 11வது தெருவைச் சேர்ந்தவர் விஜி, 40; ஆட்டோ ஓட்டுனர்.
இவர் நேற்று முன்தினம், தீவுத்திடல் போர் நினைவிடத்தில் இருந்து பாரிமுனை நோக்கி ஆட்டோவில் சென்றார்.
அப்போது காற்றில், ஆட்டோவின் 'தார்பாலின்' கூரை கிழிந்ததால், அதை சரி செய்ய முயற்சித்தார். அப்போது, ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கி காயமடைந்த விஜி உயிருக்குப் போராடினார். அந்த நேரத்தில், அவ்வழியாக, தமிழக அரசின் முதன்மை செயலர் இறையன்பு காரில் சென்றார்.
இந்த விபத்தை பார்த்ததும், உடனே காரில் இறந்து இறங்கி, ஆட்டோ ஓட்டுனர் விஜியை காப்பாற்றி, ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, விஜி நலமாக உள்ளார். இது குறித்து, கோட்டை போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.