மறைமலை நகர்:மறைமலை நகர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளுக்கு, மறைமலை நகர் மற்றும் காட்டாங்கொளத்துார் மின் வாரிய அலுவலகங்களில் இருந்து, மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இவற்றுக்கு, சாலை ஓரம் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. காவல் நிலையம் -- சித்தமனுார் சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம், மிகவும் சிதிலமடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் இருந்தது.
எனவே, அந்த பகுதியை கடந்து செல்லும் போது, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள், அச்சத்துடனேயே சென்று வந்தனர்.
இது குறித்து, நம் நாளிதழில், சமீபத்தில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மின் வாரிய ஊழியர்கள், பழைய கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக மின் கம்பத்தை மாற்றியமைத்தனர்.