மின் கம்பத்தால் ஆபத்து
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
இங்கு, பூந்தமல்லி பேருந்து பணிமனை எதிரில் உள்ள மின் கம்பம் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே, இப்பகுதியை கடந்து செல்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
-------ஆதவன், பூந்தமல்லி.