திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்த வீரன் மகன் அன்பு, 45. கடந்த ஜன., 16ல், அப்பகுதியிலிருந்து, செங்கல்பட்டிற்கு, பதிவெண் இல்லாத 'ஹோண்டா' இருசக்கர வாகனத்தில் சென்றார்.
திருக்கழுக்குன்றம், ஆசிரியர் நகர் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறி கவிழ்ந்து காயமடைந்தார்.
செங்கல்பட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலனின்றி இறந்தார். திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.