ஒதுங்க முடியாத பஸ் நிழற்குடை
சென்னை கொளத்துார், பாலாஜி நகர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள, மாநகர பேருந்து நிழற்குடை கூரையின்றி உள்ளது.
மேலும் அதில் உள்ள கூரையை தாங்கும், 'ஸ்டீல்' சட்டங்கள் சேதமடைந்து, பேருந்துக்கு காத்திருக்கும் பயணியரின் தலையில் இடித்து விழுந்து காயப்படுத்தும் நிலையில் உள்ளன.
முதல்வர் தொகுதியில் மோசமான நிலையில் உள்ள, நிழற்குடையை சீரமைக்க, மாநகராட்சி அதிகாரிகளோ, மாநகர போக்குவரத்து துறையினரோ முன்வரவில்லை.
மேலும், நிழற்குடையின் ஸ்டீல் பாகங்கள் சிறிது சிறிதாக திருடும் போகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.பி.பரந்தாமன், 46; திரு.வி.க., நகர்.