பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே, வேட்டைக்காரக்குப்பம் கிராமத்தில், சாலை ஓரத்தில் மின் விளக்குகள் பொருத்த, மின் கம்பங்கள் அமைக்கப்பட்டன.
கடந்த மாதம் ஏற்பட்ட 'மாண்டஸ்' புயல் காரணமாக, மயானத்திற்கு அருகே இருந்த மின் கம்பம் சாய்ந்தது.
இதையடுத்து, மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, மின் மாற்றியிலிருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சாய்ந்த மின் கம்பம், தற்போது வரை சீரமைக்கப்படாததால், சாலை இருளில் மூழ்கியுள்ளது.
இதனால், கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சாய்ந்த மின் கம்பத்தை சீரமைத்து, மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.