கொடுங்கையூர்,
சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் முகமது அலி, 32.
இவர் நேற்று தன் வீட்டுக்கு வெளியே மது குடித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த முகமது அலியின் நண்பர்கள் மூவர், அவரிடம் மது கேட்டு தகராறு செய்தனர்.
முகமது அலி மறுக்கவே, கத்தியால் வெட்டி விட்டு தப்பினர். படுகாயமடைந்த முகமது அலியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
புகார்படி, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
புளியந்தோப்பு, குமாரசாமி ராஜாபுரத்தை சேர்ந்த ரகுபதி, 30, சூளை, தட்டான்குளத்தைச் சேர்ந்த சுரேஷ், 28, வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனியை சேர்ந்த அருண்குமார், 31 ஆகிய மூவரை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.
இதில் ரகுபதி மீது ஒரு கொலை வழக்கு உட்பட 14 குற்ற வழக்குகளும், சுரேஷ் மீது ஒரு திருட்டு வழக்கு உட்பட ஆறு குற்ற வழக்குகளும், அருண்குமார் மீது கஞ்சா, குட்கா வழக்குகளும் உள்ளன.
இதையடுத்து போலீசார் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.