திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், ஹிந்து முன்னணியின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், வெண்பேடு கிராமம், தண்ணீர் பந்தல் பிள்ளையார் கோவிலுக்கு சொந்தமான, 30 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள நிலத்தை, தனி நபருக்கு தாரைவார்க்கும் வருவாய்த் துறையையும், மீட்க மறுக்கும் ஹிந்து அறநிலையத் துறையை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
மேலும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஹிந்து முன்னணியினர், சென்னை வரை பாத யாத்திரை சென்று, அறநிலையத் துறை அமைச்சரிடம் மனு கொடுக்கப்படும் என தெரிவித்தனர்.
கிரிவல பாதையை சீரமைக்க வேண்டும்; கந்தசுவாமி கோவில் ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க வேண்டும்; ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடையை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.