ஓட்டேரி
சென்னை ஓட்டேரி, அருந்ததி நகர், மேட்டுப்பாளையம், பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்தி, 27 என்பவர், நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டின் அருகே, மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு கஞ்சா போதையில் சென்ற, அதே பகுதி, கந்தன் தெருவை சேர்ந்த பழைய குற்றவாளி கமலக்கண்ணன், 20, கார்த்தியிடம், 50 ரூபாய் கேட்டார்.
பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன், தன்னிடம் இருந்த பிளேடால், கார்த்தியின் இடது கையில் வெட்டினார்.
படுகாயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து விசாரித்த ஓட்டேரி போலீசார், நேற்று கமலக்கண்ணனை கைது செய்தனர்.
Advertisement