விபத்தில் கட்டட பணியாளர் இறப்பு மனைவிக்கு ரூ.55 லட்சம் இழப்பீடு

Added : ஜன 18, 2023 | |
Advertisement
சென்னை, கார் மோதியதில் உயிரிழந்த கட்டட பணியாளரின் மனைவிக்கு, 55.85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார், 28; கட்டட பணியாளர். இவர், 2020 ஆக., 5ம் தேதி, தன் இருசக்கர வாகனத்தில், புக்கத்துறை கூட்ரோடு சென்றார்.அப்போது, உத்திரமேரூர் செல்லும் சாலையில் திரும்பிய போது, எதிரே



சென்னை, கார் மோதியதில் உயிரிழந்த கட்டட பணியாளரின் மனைவிக்கு, 55.85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார், 28; கட்டட பணியாளர். இவர், 2020 ஆக., 5ம் தேதி, தன் இருசக்கர வாகனத்தில், புக்கத்துறை கூட்ரோடு சென்றார்.

அப்போது, உத்திரமேரூர் செல்லும் சாலையில் திரும்பிய போது, எதிரே வந்த கார், திடீரென இரு சக்கர வாகனம் மீது மோதியது. படுகாயம் அடைந்த உதயகுமார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தலை, இடது காலில் ஏற்பட்ட படுகாயத்தால், மூன்று நாட்களுக்குப் பின், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், கணவரின் இறப்புக்கு 90 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், உதயகுமாரின் மனைவி உமா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதி டி.சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:

காரை அதிவேகம், அஜாக்கிரதையாக இயக்கியதே விபத்துக்கு காரணம். எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக, 55.85 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், மாக்மா ஹெச்.டி.ஐ., ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.

இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X