சென்னை:நடிகை ஹன்சிகாவின் திருமணம், ஓ.டி.டி.,யில் நாடகமாக ஒளிபரப்பாக உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியான ஹன்சிகா, கடந்தாண்டு டிச., 4ல், சோகைல் கத்துாரியாவை திருமணம் செய்து கொண்டார். ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் தடபுடலாக நடந்தது.
இந்த திருமணம், 'லவ் ஷாதி டிராமா' என்ற பெயரில், டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓ.டி.டி.,யில் ஒளிபரப்பாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, ஹன்சிகா வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியும், அவர்களின் திருமண நிகழ்ச்சியை தனியார் ஓ.டி.டி.,க்கு விற்றனர். இதுவரை, இவர்களின் திருமண வீடியோ இன்னும் ஒளிபரப்பாகவில்லை.