சென்னை:த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை, நேற்று சந்தித்து பேசினார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு, இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில், கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில், த.மா.கா., போட்டியிட்டது. இடைத் தேர்தலிலும் அக்கட்சி, அ.தி.மு.க., கூட்டணி சார்பில், களம் இறங்க விரும்புகிறது.
இந்நிலையில், நேற்று காலை, அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமியை, அவரது வீட்டில் த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார்.
அப்போது, இடைத்தேர்தல் குறித்து, இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.