புதுடில்லி, கடந்த ௨௦௧௮ - ௨௨ காலகட்டத்தில், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பா.ஜ.,வுக்கு ௫,௨௭௦ கோடி ரூபாய் கிடைத்துள்ளது. அனைத்து கட்சிகளின் மொத்த வருமானத்தில் ௫௭ சதவீதம் பெற்றுள்ள பா.ஜ., பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
பா.ஜ., முன்னிலை
கடந்த ௨௦௧௭ல் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, தனிநபர்களும், பெரிய நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், ௨௦௧௮ - ௨௨ காலகட்டத்தில், அனைத்து கட்சிகளும், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ௯,௨௦௮ கோடி ரூபாயை வருமானமாக பெற்றன.
இதில் பா.ஜ., ௨௦௧௯ல் ௧,௪௫௦ கோடி ரூபாய், ௨௦௨௦ல் ௨,௫௫௫ கோடி ரூபாய், ௨௦௨௧ல் ௨௨.௩௮ கோடி ரூபாய், ௨௦௨௨ல் ௧,௦௩௩ கோடி ரூபாய் மற்றும் ௨௦௧௮ல் ரசீதுகள் வாயிலாக ௨௧௦ கோடி ரூபாய் என மொத்தமாக 5,270 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
இது, அனைத்து கட்சிகளும் பெற்ற மொத்த தொகையில் ௫௭ சதவீதமாகும். இதன் வாயிலாக, பா.ஜ., பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
மறைமுக நிதி
காங்கிரஸ், ௨௦௧௯ல் ௩௮௩ கோடி ரூபாய், ௨௦௨௦ல் ௩௧௭ கோடி ரூபாய், ௨௦௨௧ல் ௧௦ கோடி ரூபாய் மற்றும் ௨௦௨௨ல் ௨௫௩ கோடி ரூபாய் என மொத்தம் ௯௬௪ கோடி ரூபாய் பெற்றுள்ளது. இது, மொத்தத் தொகையில் ௧௦ சதவீதம்.
இந்த கட்சிகளை தொடர்ந்து, திரிணமுல் காங்கிரஸ், ௨௦௧௯ - 22ல் மொத்தம் ௭௬௭ கோடி ரூபாய் பெற்று பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
'தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, அரசியல் கட்சிகளுக்கு மறைமுகமாக நிதி குவிவதால், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல்களுக்கு வழிவகுக்கிறது.
'இதில் வெளிப்படைத்தன்மை குறைந்து, அதிக அளவில் நன்கொடை அளிப்பவர்களுக்கு அரசுகள் சாதகமாகச் செயல்படும் வாய்ப்பிருக்கிறது' எனக் குறிப்பிட்டு, அரசியல் விமர்ச்சகர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பத்திரங்களை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள், இம்மாத இறுதியில் விசாரிக்கப்படும் என, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.