சென்னை:வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை, இந்தியாவில் செயல்பட அனுமதிப்பது குறித்து, கல்வியாளர்கள் தரப்பில், பிப்., 3ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின்படி, வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்கள் இந்தியாவிலும், இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளிலும், வளாகங்கள் அமைத்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுஉள்ளது.
இதன்படி, வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்கள், இந்தியாவில் தங்கள் வளாகங்களை அமைப்பது குறித்து, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., சார்பில், ஒழுங்குமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த ஒழுங்குமுறைகள், யு.ஜி.சி.,யின் www.ugc.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றில் கூடுதலாக இணைக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் ஆட்சேபனை குறித்து, பிப்., 3ம் தேதிக்குள் கல்வியாளர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. கூடுதல் விபரங்களை, மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.