புதுடில்லி, பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், பெங்களூரு தெற்குத் தொகுதி எம்.பி.,யுமான தேஜஸ்வி சூர்யா, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணா மலையுடன், டிச., ௧௦ம் தேதி 'இண்டிகோ' விமானத் தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்றார்.
விமானம் புறப்பட விருந்த நிலையில், தேஜஸ்வி சூர்யா விமானத்தின் அவசரக் கதவை தவறுதலாக திறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த விமானத்தில் கடும் சோதனை செய்யப்பட்டு, இரண்டு மணி நேர தாமதத்துக்குப் பின் புறப்பட்டுச் சென்றது.
இந்த சம்பவத்திற்கு, தேஜஸ்வி சூர்யா உடனடியாக மன்னிப்பு கேட்டதாக, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தெரிவித்தார்.
கடந்த மாதம் நடந்த இச்சம்பவத்தை, அமைச்சர் நேற்று தெரிவித்தது, பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்நிலையில் 'இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை' என விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துஉள்ளார்.