புதுக்கோட்டை:திருவப்பூர் அருகே, வடமாலப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகள் முட்டியதில், 21 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர் அருகே, வடமாலப்பூரில், நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், 525 காளைகளும், 200 வீரர்களும், 'ஆன்லைன்' வழியாக பதிவு செய்திருந்தனர்.
நேற்று காலை, 8:30 மணிக்கு வாடிவாசலிலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்க முயன்ற வீரர்களில், 21 பேர் காயமடைந்தனர்; 10-க்கும் மேற்பட்டோர் மேல்சிகிச்சைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் சீறிப்பாய்ந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.